புலம்பெயர் தமிழ் இளையோர்கள் ஈழம் தொடர்பில் கரிசனையோடு உள்ளனர்! யாழினி ராஜகுலசிங்கம்

#Canada #Tamil People #Tamil Student
Mayoorikka
1 year ago
புலம்பெயர் தமிழ் இளையோர்கள் ஈழம் தொடர்பில் கரிசனையோடு உள்ளனர்!  யாழினி ராஜகுலசிங்கம்

புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் இளையோர்கள் ஈழம் தொடர்பில் மிகுந்த கரிசனையோடு இருப்பதாக சமூக செயற்பாட்டாளரும் பாடசாலைசபை அறக்காப்பாளருமான யாழினி ராஜகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

 சங்ககாலத்தில் இருந்தே ஈழம் என்ற வார்த்தைப் பிரயோகம் இருந்ததாகவும் அதனை சொல்வதற்கு பயப்பட வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளளார்.

 கனடாவில் இடம்பெற்ற Genocide Chronicle நூல் வெளியீட்டுநிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 மேலும் கனடாவில் வசிக்கும் தமிழ் மாணவர்கள் தாய் நாட்டில் நடந்த இனப்படுகொலை பற்றி அறிந்து கொள்வதற்கு ஆர்வமாகவும் அவர்கள் தொடர்பில் கரிசனையாகவும் இருப்பதாகவும் கூறினார்.

 யாழினி ராஜசிங்கம் கனடாவில் பாடசாலைகளில் சாதி ஒடுக்குமுறைகள் களையப்பட வேண்டுமென போராட்டங்களில் ஈடுப்பட்டதோடு பிரேரணை நிறைவேற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!