இராணுவத் தளபதி புதிய பிரித்தானிய உயர் ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகருடன் கலந்துரையாடியுள்ளார்.

#Sri Lanka #Lanka4 #Britain #இலங்கை #Sri Lankan Army #லங்கா4
Kantharuban
3 months ago
இராணுவத் தளபதி புதிய பிரித்தானிய உயர் ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகருடன் கலந்துரையாடியுள்ளார்.

கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் வெளிச் செல்லும் பாதுகாப்பு ஆலோசகரான பிரித்தானிய இராணுவத்தின் கேணல் போல் கிளிட்டன் மற்றும் புதிய இராணுவ ஆலோசகரான கேணல் டேரன் வூட்ஸ் ஆகியோர் கடந்த 1ஆம் திகதி பிற்பகல் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தனர்.

 இச்சந்திப்பின் போது, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள், தனது பதவிக்காலத்தில் இராஜதந்திர மற்றும் இராணுவ உறவுகளை வலுப்படுத்துவதற்காக அர்ப்பணிப்பு தந்து உதவிய பாதுகாப்பு ஆலோசகருக்கு தனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

 இரு நாடுகளின் ஆயுதப் படைகளுக்கும் இடையே நிலவும் நல்லெண்ணம், ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வு ஆகியவற்றின் பிணைப்புகளை நினைவுபடுத்தி பொதுவான விடயங்களை கலந்துரையாடினர். 

இலங்கை இராணுவத்தினருக்கான பயிற்சித் திட்டங்களை மேலும் மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் வெவ்வேறு பரிமாற்ற நிகழ்ச்சிகளில் இரு நாட்டு ஆயுதப்படைகளின் பங்கேற்பு தொடர்பாகவும் அவர்கள் கலந்துரையாடினர்.

 இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் நடைபெற்ற அடிப்படை அணிநடை பயிற்றுவிப்பாளர் பாடநெறிக்கு பிரித்தானிய இராணுவ நிபுணர்கள் வழங்கிய பங்களிப்புக்கு வெளியேறும் பாதுகாப்பு ஆலோசகருக்கு இராணுவத் தளபதி விசேடமாக நன்றி தெரிவித்தார்.

 மேலும், வெளியேறும் பாதுகாப்பு ஆலோசகர், இலங்கையில் தனது பதவிக்காலத்தில் தொடர்ச்சியான ஒத்துழைப்பு மற்றும் நல்லெண்ணத்திற்கு நன்றி தெரிவித்ததோடு, இராணுவத்தின் சிறந்த புரிதலுக்கும் சகோதரத்துவத்திற்கும் நன்றி தெரிவித்தார்.

 சுமூகமான சந்திப்பின் இறுதியில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் வெளியேறும் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் புதிய பாதுகாப்பு ஆலோசருக்கும் நினைவுச் சின்னங்களை வழங்கி இலங்கை இராணுவத்தின் நல்லெண்ணத்தை அடையாளப்படுத்தினார்.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு