தமிழ்நாடு சிதம்பரத்தில் நிகழ்ந்த கருணாநிதி நுாற்றாண்டு விழாவில் புத்தாடை வழங்கி அன்னதானம் கொடுக்கப்பட்டது
#India
#Lanka4
#celebration
#லங்கா4
Mugunthan Mugunthan
2 years ago
இன்று கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிதம்பரத்தில் மாவட்ட பொறியாளர்கள் அணியினர் பங்கேற்று கட்சிக் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திமுக செயலாளர் மற்றும் நகர மண்டப தலைவர்கள் பங்கேற்று கட்சிக் கொடியினை ஏற்றி வைத்து கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அப்பு சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். பின்னர் நகராட்சி துப்புரவு பணியளர்கள் 30 பேருக்கு புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கினார் .
நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் கே.ஆர்.செந்தில்குமார் கட்சி கொடியை ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். சுமார் 200-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.