பிள்ளைகளின் கல்வி முயற்சி நிறைவேறும் , நட்புகளால் ஆதாயம் காணும் கடக ராசியினர் - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
10 months ago
பிள்ளைகளின் கல்வி முயற்சி நிறைவேறும் , நட்புகளால் ஆதாயம் காணும் கடக ராசியினர் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி : உங்கள் முயற்சியில் சில சங்கடத்தை சந்திப்பீர்கள். செயல்களில் கவனம் தேவை. பரணி : பணிபுரியும் இடத்தில் மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வாக்கு வாதங்களை தவிருங்கள். கார்த்திகை 1 : எதிர்பார்த்த ஒன்று நடைபெறாமல் போகும். சட்ட ரீதியான சங்கடத்தையும் ஒரு சிலர் அடைவீர்கள்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4 : வேலை வாய்ப்பை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ரோகிணி : உற்சாகத்துடன் செயல்பட்டு நீங்கள் விரும்பியதை அடைவீர்கள். பொன்பொருள் சேர்க்கை உண்டு. மிருகசீரிடம் 1,2: உறவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : உடல் நிலையில் இருந்த பாதிப்பு விலகும். உற்சாகமுடன் செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். திருவாதிரை : எதிரிகளால் உண்டான பிரச்னைகளுக்கு சட்ட ரீதியாக முடிவு கட்டுவீர். ஆதாயம் அதிகரிக்கும். புனர்பூசம் 1,2,3 : எதிர்பார்ப்பு நிறைவேறும். சேமிப்பு ஏற்படும். குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும்.

கடகம்

புனர்பூசம் 4 : பிள்ளைகளின் கல்வி முயற்சி நிறைவேறும். வியாபாரத்தில் புதிய மாற்றத்தை செய்வீர்கள். பூசம் : பெரியவர்கள் ஆலோசனையை ஏற்று செயல்படுவீர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதிநிலை உயரும். ஆயில்யம் : வசிக்கும் இடத்தை மாற்றம் செய்வது பற்றி யோசிப்பீர்கள். நட்புகளால் ஆதாயம் காண்பீர்கள்.

சிம்மம்

மகம் : எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். திட்டமிட்டு செயல்பட்டு ஒரு முயற்சியில் லாபம் காண்பீர்கள். பூரம் : உங்கள் செயல்களை மற்றவர்கள் பாராட்டுவர். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உத்திரம் 1 : வியாபாரம் சம்பந்தமாக நீங்கள் மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். வருவாய் அதிகரிக்கும்.

கன்னி

உத்திரம் 2,3,4 : நீண்ட நாள் முயற்சி ஒன்றில் அனுகூலமும் ஆதாயமும் உண்டாகும். தொழிலை விரிவு செய்வீர்கள். அஸ்தம் : பணிபுரியும் இடத்தில் உங்கள் ஆலோசனை ஏற்கப்படும். உயரதிகாரிகள் உங்களைப் பாராட்டுவர். சித்திரை 1,2: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி நிறைவேறும்.

துலாம்

சித்திரை 3,4 : உங்கள் முயற்சிகளுக்கு தடையாக இருந்தவர் விலகிச் செல்வர்கள். வருமானம் அதிகரிக்கும். சுவாதி : எதிர்பார்த்த வரவு வரும். வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு அனுகூலமான தகவல் வரும். விசாகம் 1,2,3: கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தினர் உதவியுடன் தொழிலை விரிவு செய்வீர்கள்.

விருச்சிகம்

விசாகம் 4 : உங்கள் விருப்பம் நிறைவேறும். அலைச்சல் உண்டானாலும் முயற்சியில் லாபம் காண்பீர்கள். அனுஷம் : தொழில் குறித்த ரகசியங்களை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம். வரவு செலவில் கவனம் தேவை. கேட்டை: பொன் பொருள்களைக் கையாளுவதில் கவனம் தேவை. வேறு சிந்தனைக்கு இடமளிக்க வேண்டாம்.

தனுசு

மூலம் : வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். திடீர் செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். பூராடம் : உடன் பணி புரிவோர் உங்கள் எண்ணத்திற்கு எதிராக செயல்படுவர். மனதில் குழப்பம் அதிகரிக்கும். உத்திராடம் 1 : குடும்ப உறவுகளால் திடீர் செலவுகள் ஏற்பட்டு சங்கடத்திற்கு ஆளாவீர்கள். கவனம் தேவை.

மகரம்

உத்திராடம் 2,3,4 : நீங்கள் திட்டமிட்ட செயல் எளிதாக நிறைவேறும். எதிர்பார்த்த வருவாய் இன்று வரும். திருவோணம் : நண்பர்கள் உதவியுடன் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள். ஆதாயம் அதிகரிக்கும். அவிட்டம் 1,2: தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவார்கள். உங்கள் நீண்டநாள் விருப்பம் நிறைவேறும்.

கும்பம்

அவிட்டம் 3,4 : நேற்றைய முயற்சி ஒன்று இன்று நிறைவேறும். தொழிலில் லாபம் காணும் நாள். சதயம் : எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். புதிய முயற்சி ஒன்று வியாபாரத்தில் லாபத்தை உண்டாக்கும். பூரட்டாதி 1,2,3 : தொழிலில் ஏற்பட்ட மந்த நிலையை சரி செய்வீர். உங்கள் அணுகுமுறையால் நன்மை அதிகரிக்கும்.

மீனம்

பூரட்டாதி 4 : நேற்றுவரை இருந்த நெருக்கடி விலகும். நீங்கள் எதிர்பார்த்த செய்தி உங்களைத் தேடிவரும். உத்திரட்டாதி : பண வரவில் இருந்த தடை விலகும். குடும்பத்தில் இருந்த சங்கடம் நீங்கும். ரேவதி : நெருக்கடி அகலும். எதிர்பாராத வரவு உண்டாகும். தந்தை வழி உறவுகளால் நன்மையை காண்பீர்கள்.