சினிமாவில் இருந்து ஓய்வு பெற உள்ள எஸ்.எஸ்.ராஜமௌலி
#TamilCinema
#Director
#retirement
#Movies
Prasu
5 months ago
இந்திய சினிமா கொண்டாடும் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. கடைசியாக இவரது இயக்கத்தில் RRR திரைப்படம் வெளியாகி இருந்தது, இதில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது வரை சென்றது.
இப்படத்தை தொடர்ந்து ராஜமௌலி – மகேஷ் பாபுவை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார். நாயகியாக பிரியங்கா சோப்ரா நடித்துவரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது.
இப்படம் காசியின் வரலாற்றைப் பேசும் படமாக உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்திற்கு பிறகு ராஜமௌலியின் கனவுப் படமான மகாபாரதம் தயாராக உள்ளது.
இந்த படத்திற்கான பேச்சகள் அவ்வப்போது அடிபடுகிறது.
தற்போது என்ன தகவல் என்றால் மகாபாரத படத்தோடு எஸ்.எஸ்.ராஜமௌலி சினிமாவில் இருந்து ஓய்வு பெற முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
