துணிச்சலாக செயல்பட்டு ஒரு முயற்சியில் வெற்றி காணும் கன்னி ராசியினர் - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
10 months ago
துணிச்சலாக செயல்பட்டு ஒரு முயற்சியில் வெற்றி காணும் கன்னி ராசியினர் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி : நீங்கள் ஈடுபடும் செயல்களில் லாப நிலை உண்டாகும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பரணி : புதிய முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றி காண்பீர். உங்கள் எண்ணம் நிறைவேறும். கார்த்திகை 1 : வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். அடுத்தவரை நம்பி எந்த முயற்சியிலும் இறங்க வேண்டாம்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4 : உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ரோகிணி : விரும்பிய வகையில் செயல்படுவீர்கள். நண்பர்கள் வழியே நன்மையே அதிகரிக்கும். மிருகசீரிடம் 1,2 : புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்வீர். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : பிள்ளைகள் வழியில் நன்மை அதிகரிக்கும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். திருவாதிரை : வியாபாரத்தில் வேலை ஆட்களை மாற்றுவீர். வருமானத்தில் இருந்த தடை அகலும். லாபம் அதிகரிக்கும். புனர்பூசம் 1,2,3 : மற்றவர்களுக்காக உங்களை மாற்றிக் கொள்வீர். புதிய முயற்சி ஒன்று லாபமாகும். நன்மையான நாள்.

கடகம்

புனர்பூசம் 4: அலைச்சல் அதிகரித்தாலும் குடும்ப பிரச்னை தீரும். சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும். பூசம் : புதிய முயற்சி அனுகூலமாகும். விலகிச்சென்ற உறவுகள் உங்களைத் தேடி வருவர். சங்கடம் விலகும். ஆயில்யம் : வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தைக் காண்பீர். ஆடம்பர செலவு செய்து மகிழ்வீர்கள்.

சிம்மம்

மகம் : உங்களுக்கு விருப்பமான ஒருவரை இன்று சந்திப்பீர். புதிய இடம் வாங்கும் முயற்சி நிறைவேறும். பூரம் : வியாபாரத்தின் நுணுக்கங்களை தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவீர். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்திரம் 1 : உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீண்டநாள் முயற்சி ஒன்று இனிதாக இன்று நிறைவேறும்.

கன்னி

உத்திரம் 2,3,4 : சொத்துப் பிரச்னை உங்களுக்கு சாதகமாகும். நீங்கள் ஈடுபடும் செயல் லாபமாகும். அஸ்தம் : உங்கள் தனித்திறமை இன்று வெளிப்படும். துணிச்சலாக செயல்பட்டு ஒரு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். சித்திரை 1,2: எதிரிகளால் உண்டான நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாளுவீர்கள்.

துலாம்

சித்திரை 3,4: கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்னைகளை பேசி தீர்ப்பீர். எதிர்பார்த்த வரவு வரும். சுவாதி : கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். விசாகம் 1,2,3 : நீங்கள் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உறவினர் உதவியுடன் புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம்

விசாகம் 4 : மனதில் தேவையற்ற சிந்தனை உண்டாகும். குடும்பத்தில் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவீர். அனுஷம் : ஒரு சிலர் உங்களை குறை சொல்வார்கள். அமைதியாக இருப்பதால் நன்மை அதிகம் உண்டு. கேட்டை : குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர். குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள்.

தனுசு

மூலம் : வெளியூர் பயணம் மேற்கொள்வீர். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள். பூராடம் : எதிர்கால நலனை ஒட்டி ஒரு முயற்சி மேற்கொள்வீர். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்திராடம் 1 : குழந்தைகளுக்காக செலவு செய்வீர்கள். அதனால் அவர்களது மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

மகரம்

உத்திராடம் 2,3,4 : நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரை இன்று சந்திப்பீர்கள். திருவோணம் : உங்கள் செயல்களை மற்றவர்கள் பாராட்டுவர். புதிய பொறுப்பு உங்களை வந்து சேரும். அவிட்டம் 1,2 : வியாபாரத்தை விருத்தி செய்ய முயற்சி மேற்கொள்வீர். குடும்பத்தினர் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

கும்பம்

அவிட்டம் 3,4 : பொது நலனில் கவனம் செல்லும். அரசாங்க முயற்சிகளில் ஆதாயம் உண்டாகும். சதயம் : வியாபாரத்தில் இருந்து வந்த தடை நீங்கும். நண்பர்களுடன் புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்வீர்கள். பூரட்டாதி 1,2,3: மற்றவர்களுக்காக உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வீடு வாகனத்தை சீர் நினைப்பீர்கள்.

மீனம்

பூரட்டாதி 4 : உங்கள் செயல்களில் இருந்து வந்த நெருக்கடி விலகும். மனதில் நிம்மதி உண்டாகும். உத்திரட்டாதி : பணியிடத்தில் உண்டான சங்கடம் விலகும். உங்கள் வார்த்தைக்கு மதிப்புண்டாகும். ரேவதி : நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இழுபறியாகும். திட்டமிட்டிருந்த ஒரு வேலையை முடிக்க முடியாமல் போகும்.