குழப்பங்களுக்கு இடம் தராமல் செயல்பட வேண்டிய துலா ராசியினர் - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
10 months ago
குழப்பங்களுக்கு இடம் தராமல் செயல்பட வேண்டிய துலா ராசியினர் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி : திட்டமிட்டிருந்த செயல்களை நினைத்தபடி செய்து முடிப்பீர். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். பரணி : எதிர்பார்ப்பு நிறைவேறும். எதிரிகள் விலகிச் செல்வர். உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள் கார்த்திகை 1 : உங்கள் அணுகுமுறையால் தொழிலில் ஏற்பட்ட சங்கடம் விலகி நன்மை அதிகரிக்கும் நாள்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4 : எதிர்ப்பை சரிசெய்து உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். நன்மையான நாள். ரோகிணி : விஐபிகள் உதவியுடன் உங்கள் எண்ணத்தை நிறைவேற்றி லாபம் அடைவீர்கள். மிருகசீரிடம் 1,2 : வியாபாரத்தை அபிவிருத்தி செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். பணவரவு அதிகரிக்கும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர். முயற்சி முன்னேற்றம் தரும் நாள். திருவாதிரை : எதிர்பாராத பணவரவு ஏற்படும். நீண்டநாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். புனர்பூசம் 1,2,3 : இழுபறியாக இருந்த முயற்சி நடந்தேறும். தந்தை வழி சொத்தில் இருந்த பிரச்னை முடிவு பெறும்.

கடகம்

புனர்பூசம் 4 : அலைச்சலும் செலவுகளும் அதிகரிக்கும் என்றாலும் உங்கள் விருப்பம் நிறைவேறும். பூசம் : மாற்று இனத்தவர் உதவியுடன் தொழிலை விரிவு செய்வீர்கள். பொன் பொருள் சேரும். நிதிநிலை உயரும். ஆயில்யம் : நன்மை அதிகரிக்கும். விரயங்கள் கட்டுப்படும். வழக்கு சாதகமாகும் நாள்.

சிம்மம்

மகம் : அதிகாரிகள் ஆதரவுடன் உத்தியோகத்தில் நீங்கள் விரும்பிய மாற்றத்தை அடைவீர்கள். பூரம் : விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். லாபகரமான நாள். உத்திரம் 1 : தடைகளைத் தாண்டி முயற்சியில் வெற்றி காண்பீர்கள். உங்கள் செயலில் லாபம் உண்டாகும்.

கன்னி

உத்திரம் 2,3,4 : கருத்து வேறுபாட்டால் விலகிச் சென்றவர்கள் உங்களைத் தேடி வருவார்கள். அஸ்தம் : உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். மனதில் இருந்த குழப்பம் விலகும். சித்திரை 1,2 : தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும். சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

துலாம்

சித்திரை 3,4 : உங்கள் மனம் மகிழும் படியான சம்பவம் நடைபெறும். நேற்றைய எண்ணம் நிறைவேறும். சுவாதி : குடும்பத்தின் தேவையை நிறைவேற்ற செலவு ஏற்படும் என்றாலும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். விசாகம் 1,2,3 : குழப்பங்களுக்கு இடம் தராமல் செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சி நன்மை தரும்.

விருச்சிகம்

விசாகம் 4 : வெளியூர் பயணம் வெற்றி தரும். வரவேண்டிய பணம் வந்து சேரும் நாள். அனுஷம் : உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேறு இடத்திற்கு மாறுதல் கேட்பீர்கள். உங்கள் விருப்பம் நிறைவேறும். கேட்டை : நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு முயற்சி இன்று நிறைவேறும்.

தனுசு

மூலம் : வியாபார முன்னேற்றம் கருதி நீங்கள் எடுக்கும் முயற்சி லாபமாகும். வருவாய் அதிகரிக்கும். பூராடம் : நிதி நெருக்கடி விலகும். எதிர்பார்த்த பணம் இன்று வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்திராடம் 1 : நீண்டநாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். உங்கள் செல்வாக்கு உயரும்.

மகரம்

உத்திராடம் 2,3,4 : நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி முன்னேற்றம்அடையும். பகைவர்கள் விலகிச் செல்வர். திருவோணம் : சிலர் உங்கள் முன்னேற்றம் கண்டு விமர்சனம் செய்வார்கள் அதைப் பெரிது படுத்தாதீர்கள். அவிட்டம் 1,2 : உங்கள் ஆரோக்கியம் சீராகும். துணிச்சலுடன் செயல்பட்டு நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள். 

கும்பம்

அவிட்டம் 3,4 : நேற்று இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்த்த வரவு வரும். மகிழ்ச்சி அதிகரிக்கும். சதயம் : புதிய முயற்சி நன்மை தரும். உங்கள் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டிய நிலை உண்டாகும். பூரட்டாதி 1,2,3 : குடும்ப உறவு ஒத்துழைப்புடன் புதிய சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். 

மீனம்

பூரட்டாதி 4 : நீங்கள் மேற்கொள்ளும் செயல்களில் சங்கடத்தை சந்திப்பீர்கள். விழிப்புணர்வு தேவை. உத்திரட்டாதி : வீடு, அலுவலகத்தில் நடைபெறும் தகவல்களை வெளி நபர்களிடம் தெரிவிக்க வேண்டாம். ரேவதி : வாழ்க்கைத்துணையின் ஆலோசனையின்படி செயல்படுவதால் லாபம் அதிகரிக்கும் நாள்.