செயலில் உற்சாகம் இருக்கும் , நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும் , எதிர்பார்ப்பு நிறைவேறும் மேஷ ராசியினர் - இன்றைய நாள் பலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
செயலில் உற்சாகம் இருக்கும் , நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும் , எதிர்பார்ப்பு நிறைவேறும் மேஷ ராசியினர் - இன்றைய நாள் பலன்

மேஷம்

அசுவினி : குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பரணி : உங்கள் செயலில் உற்சாகம் இருக்கும். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்பார்ப்பு நிறைவேறும். கார்த்திகை 1 : பொருளாதார நிலையை உயரும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும் நாள்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4 : எதிர்பாராத நெருக்கடிகளை சந்தித்தாலும் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். ரோகிணி : உறவினர் ஆதரவுடன் உங்கள் தேவையை நிறைவேற்றிக் கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மிருகசீரிடம் 1,2 : சொத்து விவகாரத்தில் இழுபறி உண்டாகும். யோசித்து செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : புதிய முயற்சி இன்று வேண்டாம். வழக்கமான செயல் வெற்றியாகும். கவனமுடன் செயல்படுங்கள். திருவாதிரை : நண்பர்கள் ஒத்துழைப்புடன் உங்கள் எண்ணம் நிறைவேறும். எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். புனர்பூசம் 1,2,3 : உங்கள் ஆற்றல் வெளிப்படும். நிறைவேறாமல் இருந்த ஒரு முயற்சி எளிதாக நிறைவேறும்.

கடகம்

புனர்பூசம் 4: குடும்பத்தில் ஒருவருடைய விருப்பம் இன்று நிறைவேறும். சகோதரர்களால் நன்மை ஏற்படும். பூசம் : செயலில் வேகம் இருக்கும். வாக்கு வன்மையால் உங்கள் முயற்சியில் ஆதாயம் காண்பீர்கள். ஆயில்யம் : குழப்பம் விலகும். வியாபாரத்தில் மாற்றம் காண்பீர்கள் அதனால் லாபம் அதிகரிக்கும்.

சிம்மம்

மகம் : குழப்பம் அதிகரிக்கும். அடுத்தவரை நம்பி எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம். பூரம் : வரவேண்டிய பணம் வந்து திருப்பு முனையை உருவாக்கும். நினைத்த எண்ணம் ஒன்று நிறைவேறும். உத்திரம் 1 : வியாபாரம், தொழிலில் லாபம் தரும் ரகசியத்தை பெரியவர் மூலம் அறிந்து கொள்வீர்கள். 

கன்னி

உத்திரம் 2,3,4 : ஒரு சிலர் குடும்பத்துடன் கோயில் வழிபாட்டை மேற்கொள்வீர். வீண்செலவுகள் ஏற்படும். அஸ்தம் : நண்பர்கள் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள் என்றாலும் எதிர்பாராத செலவு ஏற்படும். சித்திரை 1,2: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். செலவுகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

துலாம்

சித்திரை 3,4 : உங்கள் செயல்களில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். நண்பர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுவாதி : இழுபறியாக இருந்த ஒரு முயற்சி நிறைவேறும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். விசாகம் 1,2,3: வழக்கமான செயல்களில் லாபம் காண்பீர்கள். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. 

விருச்சிகம்

விசாகம் 4 : உங்கள் செயலில் வேகம் இருக்கும் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பீர்கள். அனுஷம் : எதிர்பார்த்த பணம் உங்களைத்தேடி வரும். இன்று உங்கள் முயற்சி நிறைவேற அனுகூலமான நாள். கேட்டை: வியாபாரத்தில் இருந்த பிரச்னை விலகும். எதிர்பாராத வரவு வந்து உங்களை மகிழ்விக்கும். 

தனுசு:

மூலம் : எதிர்காலம் கருதி நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். ஆதாயம் உண்டாகும். பூராடம் : சேமிப்பில் கவனம் செலுத்துவீர். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். உத்திராடம் 1 : குடும்பத்தில் நெருக்கடிகளை சந்தித்தாலும் அதை உங்கள் திறமையால் சமாளிப்பீர்கள். 

மகரம்

உத்திராடம் 2,3,4 : வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். புதிய முயற்சி பலன் தரும். எதிர்பார்ப்பு நிறைவேறும். திருவோணம் : தடைபட்டிருந்த செயல் இன்று இனிதே நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அவிட்டம் 1,2 : மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும். துணிவுடன் செயல்பட்டாலும் உங்கள் முயற்சி இழுபறியாகும். 

கும்பம்

அவிட்டம் 3,4 : நினைத்தது ஒன்று நடப்பது வேறாக இருக்கும். புதிய முயற்சியை ஒத்தி வைப்பது நல்லது. சதயம் : குடும்பத்தினருடன் வெளியூர் பயணம் மேற்கொள்வீர். கோயில் வழிபாடு மன நிம்மதியை உண்டாக்கும். பூரட்டாதி 1,2,3: வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட சச்சரவு நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

மீனம்

பூரட்டாதி 4 : உங்கள் விருப்பம் நிறைவேறும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். உத்திரட்டாதி : குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். இழுபறியாக இருந்த சொத்து விவகாரத்தை பேசி தீர்ப்பீர்கள். ரேவதி : உங்கள் நீண்ட நாள் முயற்சி நிறைவேறும். நண்பர்கள் உதவியுடன் ஒரு செயலில் லாபம் காண்பீர்.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு