போட்டிகளை சமாளித்து வியாபாரத்தை விரிவு செய்து வருவாயை அதிகரிக்கும் விருச்சிக ராசியினர் - இன்றைய நாள்பலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
10 months ago
போட்டிகளை சமாளித்து வியாபாரத்தை விரிவு செய்து வருவாயை அதிகரிக்கும் விருச்சிக ராசியினர் - இன்றைய நாள்பலன்

மேஷம்

அசுவினி : முயற்சியை நிறைவேற்றுவதில் அக்கறை காட்டுவீர்.எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். பரணி: தள்ளிப்போன முயற்சி நிறைவேறும். நினைத்ததை சாதிப்பீர்கள்.எதிர்ப்புகள் அடங்கும். கார்த்திகை 1 : இன்று உங்கள் செயலை குறை சொன்னவர்கள் மனமாற்றம் அடைவர்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4 : சூழ்நிலைகள் ஏற்ப இன்று செயல்களை சாதகமாக்குவீர்கள். வருவாய் அதிகரிக்கும் ரோகிணி : திட்டமிட்டு செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாக தொல்லைஅளித்தவர்கள் விலகுவர். மிருகசீரிடம் 1,2 : நினைத்ததை சாதிப்பீர். வருமானத்தில் இருந்து வந்த தடை விலகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : துணிச்சலுடன் செயல்படுவீர். எதிர்பார்த்த வருமானம் வரும். திருவாதிரை : வேலை தேடியவர்களுக்கு நற்தகவல் வரும். வழக்கு உங்களுக்கு சாதகமாகும். புனர்பூசம் 1,2,3 : நண்பர்கள் உதவியுடன் உங்கள் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

கடகம்

புனர்பூசம் 4 : அரசு வழி முயற்சி நன்மை தரும். பிள்ளைகளின் தேவையை நிறைவேற்றுவீர்கள். பூசம் : உங்கள் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தினரால் உங்கள் செயல் வெற்றி பெறும். ஆயில்யம் : நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

சிம்மம்

மகம் : குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பெரியோரின் ஆலோசனை நன்மை தரும். பூரம் : உங்கள் முயற்சி இழுபறியாகும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. உத்திரம் 1 : செயல்களில் தடுமாற்றத்தை சந்திப்பீர்கள். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.

கன்னி

உத்திரம் 2,3,4 : வருமானத்தில் இருந்து வந்த தடை விலகும். நண்பர்களின் வழியே நன்மை அதிகரிக்கும். அஸ்தம்: வியாபாரத்தில் இருந்த வந்த தடை விலகும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். சித்திரை 1,2 : நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வழக்கு சாதகமான நிலை உண்டாகும்.

துலாம்

சித்திரை 3,4 : உற்சாகத்துடன் செயல்படுவீர். உங்கள் நீண்ட நாள் எண்ணம் இன்று நிறைவேறும். சுவாதி : நீங்கள் எதிர்பார்த்த செய்தி வரும். வெளியூர் பயணத்தில் நன்மை இல்லாமல் போகும். விசாகம் 1,2,3 : அலுவலகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். நண்பர்கள் உதவியால் நன்மை அதிகரிக்கும்.

விருச்சிகம்

விசாகம் 4 : தொழிலை மாற்றம் செய்வது குறித்து யோசிப்பீர்கள். குடும்பத்தில் ஒருவர் வழி காட்டுவர். அனுஷம் : போட்டிகளை சமாளித்து வியாபாரத்தை விரிவு செய்வீர். வருவாய் அதிகரிக்கும். கேட்டை: முன்னேற்றத்தை தடுக்க முயன்றவர்கள் ஆச்சரியப்படும் வகையில் மாற்றத்தை உருவாக்குவீர்கள்.

தனுசு

மூலம் : வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். மனம் மகிழும்படியான நிலை ஏற்படும். பூராடம்: அலைச்சல் அதிகரித்தாலும் உங்கள் விருப்பம் ஒன்று நிறைவேறும். உத்திராடம் 1: எதிர்பாராத நெருக்கடிகளால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். தொழிலில் கவனம் தேவை.

மகரம்

உத்திராடம் 2,3,4 : வாழ்க்கைத் துணையின் வழிகாட்டுதலால் உங்கள் விருப்பம் நிறைவேறும் திருவோணம் : வியாபாரத்தில் புதிய முயற்சி வேண்டாம். பணவரவில் தடை ஏற்பட்டாலும் அதை சமாளிப்பீர்கள். அவிட்டம் 1,2: கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. நண்பர்களால் சில சங்கடம் உண்டாகும்.

கும்பம்

அவிட்டம் 3,4 : தொழிலில் ஏற்பட்ட சங்கடம் விலகும். மனம் மகிழும்படியான நிலை உண்டாகும். சதயம் : உங்கள் செயல்களுக்கு தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வர். பூரட்டாதி 1,2,3: அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். புதிய பொறுப்புகள் வரும்.

மீனம்

பூரட்டாதி 4 : பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். குல தெய்வ அருள் உண்டு. உத்திரட்டாதி : வருமானம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிக்கு குடும்பத்தினர் ஒத்துழைப்பாக இருப்பார்கள். ரேவதி : உறவினர்கள் ஒத்துழைப்பால் உங்கள் எண்ணம் நிறைவேறும். எதிர்பார்த்த வரவு வந்து சேரும்.