வியாபாரத்தில் முயற்சி வெற்றியாகி , பொருளாதார நெருக்கடி தீரும் கன்னி ராசியினர் - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
10 months ago
வியாபாரத்தில் முயற்சி வெற்றியாகி ,  பொருளாதார நெருக்கடி தீரும் கன்னி ராசியினர் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி: அடுத்தவர் பிரச்னைகளில் தலையிடாமல் உங்கள் செயல்களில் மட்டும் கவனம் செலுத்துங்கள். பரணி : நீண்ட முயற்சிக்குப்பின் உங்கள் எண்ணம் நிறைவேறும். தாய் வழி உறவினர்கள் உதவி செய்வர். கார்த்திகை 1 : பிறரால் பிரச்னைகளை சந்திப்பீர்கள் என்றாலும் சாதுர்யமாக அவற்றை சமாளிப்பீர்கள்.

ரிஷபம்

கார்த்திகை 2, 3, 4 : நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் உதவி செய்வர். ரோகிணி : நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர். புதிய முயற்சி ஒன்று பலிதமாகும். மிருகசீரிடம் 1, 2 : உங்கள் செயல்களுக்கு தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வர். நிதானம் அவசியம்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : வார்த்தைகளில் கவனம் தேவை. நிதானமாக செயல்படுவதால் நன்மை அதிகரிக்கும். திருவாதிரை : மற்றவர் நலனில் அக்கறை கொள்வீர். உங்களை விமர்சித்தவர்கள் இன்று பாராட்டுவார்கள். புனர்பூசம் 1, 2, 3 : குடும்பத்தில் ஒருவரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும்.

கடகம்

புனர்பூசம் 4 : வேலை பளு அதிகரிக்கும். மனதில் குழப்பம் ஏற்படும். செயல்களில் கவனம் தேவைப்படும். பூசம் : மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். ஆயில்யம் : செயலில் இருந்த தடை விலகும். நினைத்ததை நிறைவேற்றி மகிழ்வீர்கள்

சிம்மம்

மகம் : வீட்டில் உள்ள பழுதுகளை சரி செய்வீர். ஒரு சிலர் புதிய சொத்து வாங்கும் முயற்சியை மேற்கொள்வீர். பூரம் : அலைச்சல் அதிகரிக்கும். திடீர் செலவு தோன்றும். சிந்தித்து செயல்படுவதால் சங்கடம் குறையும். உத்திரம் 1 : வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட பிரச்னை விலகும். நவீன பொருட்கள் வாங்குவீர்கள்.

கன்னி

உத்திரம் 2, 3, 4 : எதிர்பார்த்த வருமானம் வரும். வியாபாரத்தில் உங்கள் முயற்சி வெற்றியாகும். அஸ்தம் : வருமானம் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடி தீரும். பழைய கடன்களை அடைப்பீர்கள். சித்திரை 1, 2 : வரவேண்டிய பணம் வசூலாகும். புதிய சொத்து வாங்கும் முயற்சி பலிதமாகும்.

துலாம்

சித்திரை 3, 4 : வியாபாரத்தில் இருந்து வந்த தடைகளை சரி செய்வீர்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுவாதி : நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இன்று வெற்றியாகும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். விசாகம் 1, 2, 3 : தொழிலில் இருந்த போட்டியும் எதிர்ப்பும் விலகும். உங்கள் அறிவாற்றலால் வெளிப்படும்.

விருச்சிகம்

விசாகம் 4 : உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். தந்தை வழி உறவுகளால் ஒரு செயல் சாதகமாகும். அனுஷம் : முன்னோர்கள் அருளினால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிக்குரிய அறிகுறி உண்டாகும். கேட்டை : திட்டமிட்டு செயல்பட்டு எதிர்பார்த்த நன்மைகளை அடைவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

தனுசு

மூலம் : வெளியூர் பயணத்தால் சங்கடம் உண்டாகும். முயற்சி இழுபறியாகும். செயல்களில் கவனம் தேவை. பூராடம் : எதிர்பார்ப்பில் இழுபறி நிலை ஏற்படும். பொருளாதார நெருக்கடியால் சங்கடம் தோன்றும். உத்திராடம் 1 : உங்கள் வேலையில் முழுமையான கவனம் செலுத்த வேண்டிய நாள்.

மகரம்

உத்திராடம் 2, 3, 4 : உங்கள் எண்ணம் நிறைவேறும். நீங்கள் விரும்பியதை இன்று அடைவீர்கள். திருவோணம் : வாழ்க்கைத் துணையால் உங்கள் செயல் வெற்றியாகும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அவிட்டம் 1, 2: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர். குடும்பத்தில் இருந்த சங்கடம் நீங்கும்.

கும்பம்

அவிட்டம் 3, 4 : உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் உங்களைத் தேடி வருவர். சதயம் : திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். பிறரால் உதவி அதிகரிக்கும். வருமானம் கூடும். பூரட்டாதி 1, 2, 3: எதிரி உங்களை விட்டு விலகிச் செல்வர். நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.

மீனம்

பூரட்டாதி 4 : புதிய முயற்சி அனுகூலமாகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். உத்திரட்டாதி: வியாபாரத்தில் உண்டான பிரச்னையை சரி செய்வீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். ரேவதி : நீண்டநாள் முயற்சி ஒன்று நிறைவேறும். வழக்கு உங்களுக்கு சாதகமாகும்.