நினைத்ததை நிறைவேற்றி , புதிய வேலை வாய்ப்பிற்குரிய முயற்சி வெற்றியாகும் கன்னி ராசிக்காரர்கள் - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
11 months ago
நினைத்ததை நிறைவேற்றி , புதிய வேலை வாய்ப்பிற்குரிய முயற்சி வெற்றியாகும் கன்னி ராசிக்காரர்கள் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி : குடும்பத்தினர் ஒத்துழைப்புடன் உங்கள் எண்ணம் நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். பரணி : நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். திட்டமிட்டிருந்த செயல் நிறைவேறும். கார்த்திகை 1 : குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். தடைபட்டிருந்த செயல்கள் நிறைவேறும்.

ரிஷபம்

கார்த்திகை 2, 3, 4 : சக பணியாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். நிதானமான நாள். ரோகிணி : நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த ஒரு முயற்சி இன்று நிறைவேறும். நிதிநிலை உயரும். மிருகசீரிடம் 1, 2 : வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். தடைபட்டிருந்த வருமானம் வர ஆரம்பிக்கும். திருவாதிரை : அருகிலிருந்து மறைமுகத் தொல்லை கொடுத்தவர்கள் விலகுவார்கள்.விழிப்பான நாள். புனர்பூசம் 1, 2, 3 : நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒன்று இன்று நடைபெறும் நாள்.

கடகம்

புனர்பூசம் 4 : இன்று முக்கியமான ஒரு விஷயத்தில் முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். பூசம் : உங்கள் அறிவாற்றல் வெளிப்படும். தடைபட்டிருந்த செயல்களை முடித்து லாபம் காண்பீர். ஆயில்யம் : சிந்தித்து செயல்படுவீர்கள். நீங்கள் ஈடுபடும் செயல்களில் லாபம் அடைவீர்கள்.

சிம்மம்

மகம் : செலவு அதிகரித்தாலும் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பூரம் : புதிய முயற்சி இன்று வேண்டாம். வழக்கமான செயல்பாடுகளில் லாபம் உண்டாகும். உத்திரம் 1 : அலைச்சலும் செலவும் அதிகரித்தாலும் இழுபறியாக இருந்த ஒரு முயற்சி நிறைவேறும்.

கன்னி

உத்திரம் 2, 3, 4 : நினைத்ததை நிறைவேற்றி மகிழ்வீர். புதிய வேலை வாய்ப்பிற்குரிய முயற்சி வெற்றியாகும். அஸ்தம் : எதிர்பார்த்த வரவு வரும். உங்கள் விருப்பமானவர்களுக்காக செலவு செய்வீர்கள் சித்திரை 1, 2: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தடை விலகி முயற்சி ஒன்று வெற்றி பெறும்.

துலாம்

சித்திரை 3, 4 : வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். சுவாதி : உங்கள் முயற்சியில் இருந்த தடைகள் விலகும். தொழிலில் லாபம் ஏற்படும். விசாகம் 1, 2, 3: வியாபாரத்தில் இருந்த சங்கடம் விலகும். தொழிலை விரிவு செய்யும் சிந்தனை மேலோங்கும்.

விருச்சிகம்

விசாகம் 4 : இரண்டு நாட்களாக இருந்த சங்கடம் விலகும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். அனுஷம் : உங்கள் முயற்சி இழுபறிக்குபின் வெற்றியாகும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும். கேட்டை : அதிகாரிகளை அனுசரித்துச் செல்வதின் மூலம் உங்கள் விருப்பம் பலிதமாகும்

தனுசு

மூலம் : வாழ்க்கைத் துணையின் ஆதரவு சங்கடமான செயலை சீராக முடிப்பீர்கள். பூராடம் : உங்கள் எதிர்பார்ப்பு பெரும் முயற்சிக்குப்பின் நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் கோபம் வேண்டாம். உத்திராடம் 1: அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் செய்தும் உங்கள் முயற்சிகள் நிறைவேறாமல் இழுபறியாகும்.

மகரம்

உத்திராடம் 2, 3, 4 : உங்கள் முயற்சிகளில் சாதகமான நிலை உண்டாகும். புதிய சொத்து வாங்குவீர்கள். திருவோணம் : கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். உங்கள் முயற்சி நிறைவேறும். அவிட்டம் 1, 2: எதிர்பார்த்த தகவல் வரும். உங்களை விமர்சனம் செய்தவர்களும் பாராட்டுவார்கள்.

கும்பம்

அவிட்டம் 3, 4 : சுறு சுறுப்பாக செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். தடைகள் விலகும். சதயம் : மறைமுகமாக தொல்லை கொடுத்தவர்கள் விலகிச் செல்வர். உங்கள் எண்ணம் இன்று பூர்த்தியாகும். பூரட்டாதி 1, 2, 3 : இழுபறியாக இருந்த ஒரு முயற்சி முடிவிற்கு வரும். செயல்கள் சாதகமாகும்.

மீனம்

பூரட்டாதி 4 : சொத்து விவகாரத்தில் பிரச்னைகள் உண்டாகும் என்றாலும் அதை சரி செய்வீர்கள். உத்திரட்டாதி : அலுவலகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி பலிதமாகும். ரேவதி : வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.