கனடாவில் 12 மில்லியன் டொலர் மதிப்பிலான கஞ்சா செடிகளுடன் இருவர் கைது
#Arrest
#Police
#Canada
#drugs
Prasu
2 years ago
கனடாவில் 12 மில்லியன் டொலர் பெறுமதியான கஞ்சா செடிகள் மீட்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தின் சென் கெதரீன்ஸ் பகுதியில் இவ்வாறு கஞ்சா செடிகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆயிரம் செடிகளை வளர்ப்பதற்காக அனுமதி பெற்றுக்கொண்டு 11800 கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும், 77 கிலோ கிராம் எடையுடைய பொடியாக்கப்பட்ட கஞ்சா இலைகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
அனுமதியின்றி கஞ்சா செய்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 40 வயதான மற்றும் 25 வயதான இருவரை பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர்.