பிரான்ஸில் மே தின ஆர்ப்பாட்டத்தில் நூறுக்கும் மேற்பட்டோர் காயம்!
#Police
#France
#Protest
#world_news
#may day
Mayoorikka
2 years ago

பிரான்ஸில் இடம்பெற்ற மே தின ஆர்ப்பாட்டத்தின் போது பிரான்சில் போலீசார் உட்பட மொத்தம் 108 அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.
19 அதிகாரிகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக தலைநகர் பரிசில் காவல்துறையினர் மீது பலத்த தாக்குதல் இடம்பெற்றிருந்தது. பெற்றோல் எறிகுண்டுகளை வீசி காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இதில் இரு அதிகாரிகள் கைகள் மற்றும் முகத்தில் தீக்காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.
அதேவேளை, நாடு முழுவதும் 291 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். மே தின ஆர்ப்பாட்டம் ஒன்று முதன்முறையாக பலத்த வன்முறையை சந்தித்ததாக தெரிவித்த உள்துறை அமைச்சர் Gérald Darmanin, இந்த வன்முறைகளுக்கு கண்டனம் வெளியிட்டார்.



