கனடாவிலிருந்து நாடுகடத்தவிருக்கும் மாணவர்கள் சிலர் ஆர்ப்பட்டம் செய்ய திட்டம்!

#Canada #Protest #world_news #students
Mayoorikka
2 years ago
கனடாவிலிருந்து நாடுகடத்தவிருக்கும் மாணவர்கள் சிலர் ஆர்ப்பட்டம் செய்ய திட்டம்!

கனடாவில் கல்வி கற்பதற்காகச் செல்லும் சர்வதேச மாணவர்கள் பலர், படிப்பை முடித்து பணி உரிமம் பெற்று அவர்கள் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்கும்போது பல பிரச்சனைகளை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

 இந்தியப் பெண் கனடாவுக்கு கல்வி கற்பதற்காக சென்ற நிலையில், அவர் படிப்பை முடித்து நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கோரி விண்ணப்பித்த போது கனடா எல்லை பாதுகாப்பு ஏஜன்சி குறித்த விண்ணப்பம் போலியானது என தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர் கனடாவிலிருந்து நாடுகடத்தப்படும் நிலை உருவானது.

 இந்தநிலையில் 700 இந்திய மாணவர்கள் கனடாவிலிருந்து நாடுகடத்தப்படும் நிலை உருவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

 குறித்த இந்திய மாணவர்கள் 2019 -19 காலகட்டத்தில் கனடாவுக்கு வந்துள்ளார்கள். அவர்கள் படிப்பை முடித்து நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கோரி விண்ணப்பிக்கும்போதுதான் குறித்த தகவல் வெளியானது. அவர்களுடைய அனுமதி ஆஃபர் கடிதங்கள் (admission offer letters) போலியானவை என தெரியவந்ததையடுத்து, அவர்கள் நாடுகடத்தப்பட இருப்பதாக கனேடிய எல்லை பாதுகாப்பு ஏஜன்சி கடிதங்கள் அனுப்பியது.

 இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிலர், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசிடமிருந்து சற்று இரக்கம் கிடைக்கும் வகையில், அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஆங்காங்கு ஆர்ப்பாட்டங்கள் நடத்திவருகிறார்கள்.

 இதேவேளை பாதிக்கப்பட்ட மாணவர்கள் இதற்கு எதிராக வாரம் ரொரன்றோவில் மீண்டும் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்த திட்டமிட்டு வருகிறார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!