பிரான்ஸ் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்காக பிரதமர் அழைப்பு
#France
Lanka4
2 years ago

தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட பிரதமர் Élisabeth Borne மீண்டும் அழைப்பு விடுக்க உள்ளார்.
ஓய்வூதிய சீர்திருத்தம் காரணமாக அரசு பெரும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நிலையில், தொழிற்சங்கத்தினருடன் பிரதமர் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார். வரும் நாட்களில் அவர் தொழிற்சங்கத்தினருக்கு அழைப்பு விடுக்க உள்ளதாக தொழிலாளர் அமைச்சர் Olivier Dussopt இன்று திங்கட்கிழமை காலை தெரிவித்தார்.
ஓய்வூதிய சீர்திருத்தத்தினை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக தொழிற்சங்கத்தினர் பெரும் நெருக்கடிகளை அரசுக்கு ஏற்படுத்தி வருகின்றனர்.
தொடர் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் அதனை தடுத்து நிறுத்த பிரதமர் இந்த முயற்சியினை மேற்கொண்டுள்ளார்.



