நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப "நோக்கம்" என்னும் தொனிப் பொருளில் கலந்துரையாடல்

Kanimoli
2 years ago
நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப "நோக்கம்" என்னும் தொனிப் பொருளில் கலந்துரையாடல்

தொழில் அதிபர் திலீத் ஜயவீர தலைமையில், நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்புவது தொடர்பில் " நோக்கம்" என்ற தொனிப் பொருளில் கடந்த வெள்ளிக்கிழமை திருநெல்வேலி திண்ணை விருந்தினர் விடுதியில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

நாட்டின் பொருளாதார சவால்களை எவ்வாறு வெற்றி கொள்வது புதிய தொழில் வாய்ப்புகளை எவ்வாறு ஏற்படுத்துவது தொடர்பில் பிரபல தொழிலதிபரும் ஊடக நிறுவனத்தின் பணிப்பாளருமான திலித் ஜயவீரவினால் விளக்கம் அளிக்கப்பட்டது.

 அவரது விளக்கத்தை தொடர்ந்து கலந்துரையாடலுக்கு வருகை தந்தவர்கள் சந்தேகங்களை பகிர்ந்து கொண்டதுடன் அதற்கான பதில்களை திலீத் ஜயவீர வழங்கினார்

இக் கலந்துரையாடலில் யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொன் பாலசுந்தரம் பிள்ளை, யாழ் மாவட்ட முன்னாள் இராணுவ கட்டட தளபதி கொடித்துவக்கு,  தேசிய ஒருமைப்பாடு இன நல்லிணக்க அதிகார சபையின் பணிப்பாளர் கந்தையா கருணாகரன், தினக்குரல் பத்திரிகையின் முகாமைத்துவ பணிப்பாளர் கேசவராஜா, தமிழ் மிரர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மதன், யாழ் வணிகர் சங்கத் தலைவர் ஜெயசேகரம்,மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்  தொழிலதிபர்கள் புத்திஜீவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!