அலாஸ்க்காவில் இரு ராணுவ ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானதில் மூவர் பலி

#Death #America #Crash #Helicopter
Prasu
2 years ago
அலாஸ்க்காவில் இரு ராணுவ ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானதில் மூவர் பலி

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் ஹீலி என்ற இடத்தில் ராணுவத்தினர் நேற்று முன்தினம் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 

இதில் ராணுவத்துக்குச் சொந்தமான 2 ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டது. நடுவானில் பறந்தபோது திடீரென அந்த 2 ஹெலிகாப்டர்களும் நேருக்கு நேர் மோதி, கீழே விழுந்து நொறுங்கியது. 

இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 2 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். மற்றொரு வீரர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். 

மேலும் ஒரு வீரர் படுகாயம் அடைந்தார். மீட்பு படையினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். 

கடந்த மாதம் அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் ராணுவ பயிற்சியின் போது 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் விபத்தில் சிக்கியதில் 9 வீரர்கள் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!