அடுத்த தலைமுறைக்கு கை கொடுப்போம்: ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்கும் மே தின ஒன்றுகூடல்
#SriLanka
#Kilinochchi
#Lanka4
#may day
Prathees
2 years ago

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில், எதிர்வரும் மே முதலாம் திகதி கிளிநொச்சி பசுமைப் பூங்கா வளாகத்தில் நடைபெறவுள்ள வடக்கு மாகாணம் தழுவிய தமிழ்த்தேசிய மே நாள் நிகழ்வுக்கு வலுச்சேர்க்குமாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சமகாலத்தில், தமிழ்த்தேசிய இனம் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள சகலவிதமான ஒடுக்குமுறைகளையும் எதிர்த்துக் குரல்கொடுக்கும் இளைஞர், யுவதிகளின் பெருந்திரட்சியின் ஊடாக, பன்னாட்டு சமூகத்துக்கும், இலங்கை இனவாத அரசுக்கும் வலுவான செய்தியைச் சொல்லத்தக்கவாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம் மே நாள் நிகழ்வுகளில், அனைத்துத் தரப்பினரையும் அணிதிரளுமாறு அழைத்து நிற்கிறோம் என்றுள்ளது.



