பல்கலைக்கழக விரிவுரையாளர்களால் இலங்கைக்கு இரண்டு பில்லியன் நஷ்டம்
#SriLanka
#Lanka4
#money
#University
Prathees
2 years ago

இலங்கை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று மீண்டும் இந்த நாட்டுக்கு திரும்பாததன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் 200 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கோப் குழு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம், பணத்தை வசூலிக்கும் முறையை தயார் செய்யுமாறு தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தலைமையில் கோப் குழு கூடிய போது இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.



