சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்து அவர்கள் சுதந்திரமாக பயணிப்பதற்கு தேவையான சூழலை தயார்படுத்துமாறு பணிப்புரை

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்து அவர்கள் சுதந்திரமாக பயணிப்பதற்கு தேவையான சூழலை தயார்படுத்துமாறு ஜனாதிபதியின் தலைமை அதிகாரியும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான சாகல ரத்நாயக்க பாதுகாப்பு தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள் குழுவினால் கிடைத்த முறைப்பாடுகள் காரணமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர்களுடன் அண்மையில் நடைபெற்றது.
முச்சக்கர வண்டி உரிமையாளர்களால் பல்வேறு கெடுபிடிகள் மற்றும் துன்புறுத்தல்கள் இடம்பெறுவதாக ஹோட்டல் உரிமையாளர்கள் சுட்டிக்காட்டினர்.
ஹோட்டல்களின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடப்பட்டது. ஹோட்டல்களுக்கு தற்சமயம் அச்சுறுத்தல் இல்லையென்றாலும், பாதுகாப்பு முகமைகள் இவ்விடயத்தில் பொறுமையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலின் போது, ஹோட்டல்களின் தோராயமான திட்டத்தின் பிரதியொன்று பாதுகாப்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டுமென சாகல ரத்நாயக்க சுட்டிக்காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது .



