இலங்கை கலைத்துறையில் புகழ்பெற்ற கலைஞர் கலாபூஷணம் K.சந்திரசேகரன் இறைவனடி சேர்ந்தார்

பல தசாப்தங்களாக இலங்கை கலைத்துறையில் வானொலி, மேடை, திரைப்படம், தொலைக்காட்சியென அனைத்திலும் சாதனை படைத்துச் சகல சமூகத்தினர் மத்தியிலும் புகழ் பெற்றுத் திகழ்ந்த கலாபூஷணம் K.சந்திரசேகரன் இன்று (29) காலை காலமானார்.
கடந்த ஒரு வருட காலமாக இந்தியாவில் தனது புதல்வரின் வீட்டில் தங்கியிருந்த நிலையில், சுவாச கோளாறால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கடந்த சில தினங்களாக தீவிர சுகவீனம் காரணமாக பாதிப்பட்டிருந்த கலைஞர் K.சந்திரசேகரன் இன்று காலமானதாகவும், இறுதிக் கிரியைகள் தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் என்று உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுபவமிக்க பல்துறைக் கலைஞர் என்றாலும் புதியவர்களையும் கலையுலகில் சோபிக்க மனம் திறந்து வழிகாட்டியவராக திகழ்ந்தார்.
அமரர் மரிக்கார் ராம்தாஸ் எழுதிவந்த "கோமாளிகள்" வானொலி நாடகத் தொடர் முதல் அண்மைக்காலமாக வெளியான பல படைப்புகளிலும் அவர் தனது பங்களிப்பை வழங்கியிருந்தார்.



