தடை குறித்து வசந்த கரன்னாகொடவின் கருத்து!
#SriLanka
#Sri Lanka President
#America
Mayoorikka
2 years ago

தாமும் தமது குடும்பத்தினரும், அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதித்த, அந்த நாட்டின் முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக, முன்னாள் கடற்படைத் தளபதி, வசந்த கரன்னாகொட தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை குறித்து தமக்கு சில சந்தேகங்கள் உள்ளதுடன், இதன் பின்னணியில் வேறு ஏதேனும் காரணம் இருப்பதாக தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையின் பின்னணியில் இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரி மற்றும் அமெரிக்க தூதுவர் ஆகியோர் இருப்பதாக தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.



