சூடானில் சிக்கியிருந்த மற்றுமொரு குழுவினர் வெளியேற்றம்!

#SriLanka #Sudan #South Sudan
Mayoorikka
2 years ago
சூடானில் சிக்கியிருந்த மற்றுமொரு  குழுவினர் வெளியேற்றம்!

சூடானில் சிக்கியிருந்த இலங்கையர்களின் மற்றுமொரு குழுவினர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

 6 இலங்கையர்கள் அந்தக் குழுவில் உள்ளடங்கியுள்ளனர் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

 ஜித்தாவிலுள்ள கின் பைசல் கடற்படைத் தளத்திற்கு அழைத்து வரப்பட்ட குழுவினரை, ஜெட்டாவிலுள்ள இலங்கையின் பதில் தூதரகம் வரவேற்றதாக வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.

 சூடானில் சிக்கியிருந்த 13 இலங்கையர்கள் அண்மையில் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஜித்தாவுக்கு அழைத்து வரப்பட்ட குழுவினரை அங்குள்ள தூதரக அதிகாரிகள் வரவேற்றனர்.

 சவுதி அரேபியாவின் உதவியுடன் இந்த இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர். சூடானில் சிக்கியுள்ள மொத்த இலங்கையர்களின் எண்ணிக்கை 41 என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா அல்லது சவூதி அரேபியாவின் உதவியுடன் எஞ்சியுள்ள மக்களை பாதுகாப்பாக மீட்க முடியும் என இலங்கை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!