இந்த வருடத்தில் ஒரு இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!
#SriLanka
#Airport
#Tourist
#NuwaraEliya
Mayoorikka
2 years ago

தொடர்ந்து நான்காவது மாதமாக 100,000 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர்.
ஜனவரியில் மொத்தம் 102,545 சுற்றுலாப் பயணிகளும், பெப்ரவரியில் 107,639 மார்ச் மாதம் 125,495 வெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இதேவேளை, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, ஏப்ரல் மாதத்தில் இதுவரை 87,316 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
இதற்கிடையில், ஏப்ரல் மாதத்தில், இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வந்ததாக SLTDA தெரிவித்துள்ளது.
மார்ச் மாதத்தில் 125,495 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததாக SLTDA தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த வருடத்தில் இதுவரை 422,995 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.



