தென் கொரியாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் வெளிவிவகார அமைச்சர்!

#SriLanka #Sri Lanka President #SouthKorea
Mayoorikka
2 years ago
தென் கொரியாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் வெளிவிவகார அமைச்சர்!

எதிர்வரும் மே 2 முதல் 5 வரை நடைபெறவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் 56வது வருடாந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்கவைப் பிரதிநிதித்துவப்படுத்தி தென்கொரியாவின் இன்சியான் நகருக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி விஜயம் செய்யவுள்ளார்.

 வருடாந்தக் கூட்டம் நிதி அமைச்சர்கள், மத்திய வங்கிகளின் ஆளுநர்கள், முக்கிய உலகளாவிய வங்கிகள், நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட சுமார் 3,000 – 4,000 பங்கேற்பாளர்கள் கலந்து கொள்ளும் ஒரு உயர்மட்ட நிகழ்வாகும். 

இந்தக் காலகட்டத்திலான ஏனைய தலையீடுகளுக்கு மத்தியில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மே 04ஆந் திகதி ஆளுநரின் வணிக அமர்வில் அறிக்கையொன்றை வழங்குவார்.

 இந்த நிகழ்வின் பக்க அம்சமாக, இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கான தற்போதைய ஈடுபாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக அமைச்சர் பல நாடுகளின் பிரதிநிதிகளுடன் இருதரப்பு சந்திப்புகளில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!