26 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
#SriLanka
#Colombo
#School
#Hospital
#Food
#School Student
Prabha Praneetha
2 years ago

நானுஓயா கிளாசோ பிரதேச பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு ஒத்துகொல்லாமையால் 26 மாணவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பாடசாலையில் தொடர்ந்து பகலுணவு வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்றைய நாளில் வழங்கப்பட்ட உணவை அருந்திய வேளை மாணவர்களுக்கு மயக்கநிலை, வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டன.
உணவருந்தியவர்களில் சுமார் 26 க்கும் அதிகமான மாணவர்கள் வயிற்று உபாதைக்கு உள்ளாகியதனைத் தொடர்ந்து வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக நானுஓயா காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .



