வெடுக்குநாறி மலையிலிருந்து அகற்றப்பட்ட விக்கிரகங்கள் மீள பிரதிஷ்டை!

#SriLanka #Vavuniya #Court Order
Mayoorikka
2 years ago
வெடுக்குநாறி மலையிலிருந்து அகற்றப்பட்ட விக்கிரகங்கள் மீள பிரதிஷ்டை!

வவுனியா வெடுக்குநாறி மலையிலிருந்து அகற்றப்பட்ட விக்கிரகங்களை மீள பிரதிட்டை செய்யும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

 இன்றைய தினம் காலை விக்கிரகங்கள் பிரதிட்டை செய்யப்பட்டதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

 வெடுக்குநாறி மலையிலிருந்து அகற்றப்பட்ட விக்கிரகங்களை மீள பிரதிட்டை செய்யுமாறு வவுனியா நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ள நிலையில் இன்றைய தினம் மீள பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது.

 இந்நிலையில் மதகுருமார்கள், அரசியற் பிரதிநிதிகள், பொதுமக்களின் பங்கேற்புடன் ஆதிலிங்கேசுவரர் ஆலயத்தின் சிலைகள் மீள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

 வவுனியா வெடுக்குநாறி மலையில் வழிபாடுகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், நேற்று முன்தினம் அங்கு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!