தொழுநோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
#srilankan politics
Prabha Praneetha
2 years ago

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மூன்று மாதங்களில் இலங்கையில் தொழுநோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டு இயக்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, குறித்த காலப்பகுதியில், நாட்டின் பல பகுதிகளில் சுமார் 355 தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதுடன் அவர்களில் பெரும்பாலானவர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளனர்.



