உடலில் ஏற்படும் சாதாரண சுளுக்குகளுக்கு வீட்டில் மேற்கொள்ளக்கூடிய கைவைத்தியம்.

#ஆரோக்கியம் #சுளுக்கு #அன்டனி #தேவராஜ் #அன்டனி தேவராஜ் #Health #Body #Antoni #Theva #Antoni Thevaraj
உடலில் ஏற்படும் சாதாரண சுளுக்குகளுக்கு வீட்டில் மேற்கொள்ளக்கூடிய கைவைத்தியம்.

சுளுக்குகளில் சாதாரணமான சுளுக்கு மற்றும் கடினமான சுளுக்கு என 44 வகையான சுளுக்குகள் உள்ளன. இதில் நரம்புத் தசை நாறுகள் பெரிய அளவில் பாதிக்கப்படாமல் இருந்தால் அது சாதாரண சுளுக்கு எனவும் தசை நாறுகள் கிழிந்து அல்லது நரம்பு பாதிக்கப்பட்டிருந்தால் அது கடினமான சுளுக்கு என அழைக்கப்படும்.

இன்று நாம் பார்க்கவிருப்பது சாதாரண சுளுக்கு வீட்டில் ஏற்பட்டால் அதனை குணப்படுத்துவது எப்படி என்று ஆகும்.

முறை 1

சுளுக்கு பிரச்சனையில் அவதிப்படுபவர்களுக்கு ஜாதிக்காய் மிகவும் உதவியாக இருக்கிறது. சுளுக்கு பிரச்சனை உள்ளவர்கள் ஜாதிக்காயை உடைத்து சிறிதளவு அதோடு பால் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.

அரைத்ததை இளஞ்சூடு வரும் வரை கொதிக்க வைத்து சுளுக்கு உள்ள இடத்தில் மெதுவாக தடவி பற்றுப்போடவும். ஒரு நாள் கழித்து பற்று போட்ட இடத்தினை வெந்நீரில் கழுவி மீண்டும் பற்று போடவும். இந்த முறையை தொடர்ந்து 3 நாட்கள் செய்து வர சுளுக்கு சரியாகிவிடும்.

முறை 2

இரண்டாவது டிப்ஸாக சுளுக்கு குணமாக பூண்டு. பூண்டினை உரித்து எடுத்துக்கொள்ளவும். உரித்து வைத்துள்ள பூண்டோடு சிறிதளவு உப்பு சேர்த்து இரண்டையும் நன்றாக இடித்து வைத்துக்கொள்ளவும். இடித்து பொடியாக வைத்துள்ளதை சுளுக்கு உள்ள இடத்தில் பற்று போட்டு வர சுளுக்கு குணமாகும்.

முறை 3

சுளுக்கு குணமாக பிரண்டையை நன்றாக பிழிந்து அதன் சாறினை தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும். பிரண்டை சாறுடன் மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக காய்ச்ச வேண்டும். பிறகு அதை இதமான சூட்டில் வைத்து சுளுக்கு ஏற்பட்டிருக்கும் இடங்களில் தடவி வர சுளுக்கு பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

முறை 4

முருங்கை பட்டையோடு சிறிது பெருங்காயம், கடுகு மற்றும் சுக்கினை சேர்த்து நன்றாக அரைக்கவும். அரைத்து வைத்துள்ளதை சூடுப்படுத்தி இதமான சூடு வந்ததும் சுளுக்கு உள்ள இடத்தில் தடவி பற்று போட்டுவர சுளுக்கு பிரச்சனை குணமாகும்.

முறை 5

கை பகுதியில் சுளுக்கு பிடித்திருப்பவர்கள் சிறிதளவு கற்பூரத்தையும், மிளகு தூளையும் நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பிறகு கொதிக்க வைத்ததை ஒரு துணியில் நனைத்து கையில் எந்த இடங்களில் சுளுக்கு பிடித்திருக்கிறதோ அங்கு போட்டு வந்தால் சுளுக்கு விரைவில் குணமடையும்.