இன்று உலக கல்லீரல் தினம்!
#world_news
#ImportantNews
#Health
#Healthy
#Health Department
#World_Health_Organization
Mani
2 years ago

இன்று உலக கல்லீரல் தினம் (ஏப்.,. 19) கொண்டாடப்படுகிறது. இது உலக சுகாதார அமைச்சகத்தால் ஏப்.,. 19, 2012 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது. கல்லீரல் மற்றும் அதில் ஏற்படும் நோய்கள் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக இந்நாள் உலகின் பல்வேறு நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.
கல்லீரல் நமது உடலில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை நீக்குதல், ரத்தத்தின் சர்க்கரை அளவை சீராக வைத்திருத்தல், பித்த உற்பத்தி சமன்படுத்துதல், வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துகளை சேமித்து வைத்தல் போன்ற பல அத்தியாவசிய செயல்களை மேற்கொள்கிறது.



