இலங்கைக்கு சிலோன் என பெயர் மாற்றினால் பொருளாதார ரீதியில் வளம் மிகுந்த நாடாக மாறும்: இந்திய பிரபல ஜோதிடர்

இலங்கை சிலோன் (Ceylon) என்னும் பெயரில் இருந்த பொழுது செழிப்பு மிகுந்த வளம் மிக்க நாடாக இருந்ததாகவும் குறித்த பெயரை மாறியதால் இலங்கைக்கு அழிவு நேர்ந்ததாகவும் இந்தியாவில் உள்ள பிரபல ஜோதிடர் என் எஸ் ராஜன் தெரிவித்துள்ளார்.
லங்கா4 ஊடகத்திற்கு பிரத்தியேகமாக கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இலங்கை சிலோன் என்னும் பெயரில் இருந்து ஸ்ரீ என்ற பெயர் மாற்றப்பட்டதால் பல பேரழிவுகளை சந்திக்க நேர்ந்ததாகவும் பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்ததாகவும் ஜோதிடர் என் எஸ் ராஜன் கூறியிருந்தார்.
சிலோன் என்னும் பெயரில் இருந்த காலகட்டங்களில் இலங்கை வளம் மிக்க செழிப்பு மிகுந்த நாடாகவும் மக்கள் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருந்தனர். போர்கள் இல்லாமல் அமைதியான நாடாக சிங்கப்பூரை மிஞ்சும் அளவிற்கு வளமிக்க நாடாக இருந்தது.
ஆனால் ஸ்ரீலங்கா என மாற்றிய போதே இலங்கையில் போர் மற்றும் பஞ்சம் போன்ற அவல நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் இலங்கையின் பெயரை திரும்பவும் சிலோன் என மாற்றினால் நாட்டின் தற்போதைய அவல நிலை மாற்றம் அடைந்து நாடு மீண்டும் செழிப்புள்ள பொருளாதார ரீதியில் வளமிக்க நாடாக மாற்றம் பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை 1972 க்கு முன் இலங்கை சிலோன் (Ceylon) என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது.
இலங்கை சிலோன் என்று பெயர் பெற்றிருந்த வேளையில் தேயிலை ஏற்றுமதியில் பெயர் பெற்ற நாடாக இலங்கை இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்பொழுதும் உலக நாடுகளில் சிலோன் தேயிலை என்றால் தரமிக்கதானதாகவும், மரியாதை அதிகமாக இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது



