உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரம் கர்தினால்களுக்கு அல்ல - மைத்திரிபால சிறிசேன
#Malcolm Ranjith
#Maithripala Sirisena
#BombBlast
#Easter Sunday Attack
#Lanka4
Kanimoli
2 years ago

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரம் நீதித்துறைக்கோ அல்லது பிரதம நீதியரசருக்கோ உண்டு என்றும் கர்தினால்களுக்கு அல்ல என முன்னாள் ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அபராதம் செலுத்தாவிட்டால், என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும் என்றும், நீதிமன்றத்தை மதித்து அபராதம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு இன்று (19) காலை வணக்கம் செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.



