மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும்-உபுல் மகேந்திர ராஜபக்ஷ

#Road #Highway #Development #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
2 years ago
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும்-உபுல் மகேந்திர ராஜபக்ஷ

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவட முதல் மீரிகம வரையான பகுதியின் நிர்மாணப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் இதனை முன்னுரிமை அபிவிருத்திப் பணியாகக் கருத வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் உபுல் மகேந்திர ராஜபக்ஷ கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவித்தார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருநாகல் வரையிலான பகுதி தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையுடன் இணைக்க மீரிகம முதல் பஸ்யால வரை கடவத்தை வரையிலான சாதாரண வீதியில் பயணிக்க வேண்டியிருப்பதால் கடவத்தை முதல் மீரிகம வரையான பகுதி விரைவாக அமைக்கப்பட வேண்டும் என்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பொது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடவட-மீரிகம பகுதியானது கம்பஹா, வயங்கொட மற்றும் மீரிகம தெற்கு ஆகிய மூன்று பரிமாற்ற புள்ளிகளுடன் நிர்மாணிக்கப்படவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!