இலங்கையில் மேலும் பல பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் - நிதி இராஜாங்க அமைச்சர்

#SriLanka #Finance #Minister #Restrictions #Import #sri lanka tamil news #Lanka4
Prasu
2 years ago
இலங்கையில் மேலும் பல பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் - நிதி இராஜாங்க அமைச்சர்

இலங்கையில் மேலும் பல பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் எதிர்காலத்தில் தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.

சுங்கத்தின் எதிர்பார்க்கப்படும் வருமான இலக்கை அடைவதற்கும் இது உதவும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுங்கத்துறையின் வருமான இலக்குகள் தொடர்பான மீளாய்வு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முதல் 03 மாதங்களுக்கு சுங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள வருமான இலக்கு 270 பில்லியன் ரூபாவாகும்.

ஆனால் அந்த காலகட்டத்தில் கிடைத்த வருமானம் எதிர்பார்த்த வருமானத்தை விட 12% குறைவாகவே காட்டப்பட்டுள்ளது.

2021ல், 485 பொருட்களும், 2022ல் 750 பொருட்களும் இறக்குமதி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டன.

இதன்படி, இது தொடர்பான கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும் என்றும், மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் திணைக்களம் வழங்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் உரிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!