சிலோன் என்ற பெயரை மாற்றியதே நாடு எதிர்கொண்டுள்ள அனைத்து பிரச்சினைகளிற்கும் காரணம் - விஞ்ஞான ஆசிரியர்

சிலோன் என்ற பெயரை ஸ்ரீலங்கா என மாற்றியதே நாடு எதிர்கொண்டுள்ள அனைத்து பிரச்சினைகளிற்கும் காரணம் என விஞ்ஞான ஆசிரியரும் வானியலாளருமான அனுர சி பெரேரா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ என்ற பெயரே கடந்த சில தசாப்தங்களாக நாடு எதிர்கொண்ட பேரழிவிற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
எஸ்டபில்யூஆர்டி பண்டாரநாயக்க விஜயகுமாரதுங்க படுகொலை முதல் ஸ்ரீ என பெயரில் ஆரம்பிக்கும் அரசநிறுவனங்கள் வங்குரோத்து நிலையை அடைந்தமைக்கும் பெயர் மாற்றமே காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கடைசி மன்னனின் பெயர் கூட ஸ்ரீவிக்கிரமசிங்க ராஜசிங்க எனவும் அனுர சி பெரேரா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கட்சிகள் - தலைவர்கள் அரசாங்க நிறுவனங்களின் பெயர்கள் முன்னாள் ஸ்ரீ என்பதை பயன்படுத்தியமை பெரும் வங்குரோத்து நிலையை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
1956ம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆரம்பிக்கப்பட்டது முதல் எங்கள் நாட்டிற்கு தீமையான காலம் ஆரம்பமானது என தெரிவித்துள்ள அவர் ஸ்ரீ என்ற சொல்லை வாகனங்களின் இலக்கத்தகடுகளிற்கு பயன்படுத்திய பின்னர் சிங்கள தமிழ் சமூகங்களிற்கு இடையில் மோதல் ஆரம்பமானது எனவும் சுட்டிககாட்டியுள்ளார்.
மோதலின்போது நாடு பெருமளவு உயிரிழப்புகளை சந்தித்தது சொத்துக்களும் அழிக்கப்பட்டன என அவர் தெரிவித்துள்ளார்
பி;ன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரகட்கியின் ஸ்தாபகர் கொல்லப்பட்டார் எனவும் என விஞ்ஞான ஆசிரியரும் வானியலாளருமான அனுர சி பெரேரா தெரிவித்துள்ளார்



