முல்லைத்தீவில் பேருந்து - கனரக வாகனம் மோதி விபத்து: 10 பேர் வைத்தியசாலையில் சேர்ப்பு
#SriLanka
#Accident
#Mullaitivu
#Bus
#Hospital
Mayoorikka
2 years ago

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்புப் பகுதியில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
தம்புள்ளைக்கு அருகில் நேற்றிரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் டிப்பர் வாகன சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸின் சாரதி உள்ளிட்ட 10 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குறித்த பேருந்து கிளிநொச்சி டிப்போக்குச் சொந்தமானது என்று தெரியவந்துள்ளது.



