சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை - பல்லேகல தும்பற சிறைச்சாலை அதிகாரிகள்
#Police
#Arrest
#government
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
Kanimoli
2 years ago

பொலிஸ் திணைக்களத்தில் பன்னிரெண்டு வருடங்களை பூர்த்தி செய்த கான்ஸ்டபிள்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு இருபது வருடங்கள் கடந்த பின்னரும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை என பல்லேகல தும்பற சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது சிறை நிர்வாகம் கீழ்மட்ட அதிகாரிகளை பொருட்படுத்தாத நிலையை அடைந்துள்ளதாகவும் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற் கொண்டு உயர் அதிகாரிகள் தமது பிரச்சினைகளை அமைச்சரிடம் கூற முற்படுவதில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போதுள்ள கட்டுப்பாட்டு ஆணையரை உடனடியாக மாற்ற வேண்டும் என்பது அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.



