அமைச்சுக்களுக்காக தேசிய அரசாங்கத்தை நிறுவினால் அழிவிலேயே முடிவடையும்! உதய கம்மன்பில

தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டுமாயின் அதற்கான பொதுவான வேலைத்திட்டம் ஒன்றை முதலில் வெளிப்படுத்த வேண்டும் என பிவித்துரு ஹெல உறுமியவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அந்த வேலைத்திட்டத்தின்படி அரசாங்கத்தை ஆதரிப்பதா இல்லையா என்பதை முழு எதிர்க்கட்சியினரும் தீர்மானிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
அவ்வாறில்லாமல் அமைச்சுக்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் மாத்திரம் தேசிய அரசாங்கங்கள் அமைக்கப்படுமாயின் அது அழிவுக்கே வழிவகுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்சிகளை விட்டுவிட்டு நாட்டைக் கட்டியெழுப்ப தேசிய அரசாங்கம் ஒன்றை நிறுவ வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் முதலில் யோசனை முன்வைத்தது தாம் உள்ளிட்ட குழுக்களே எனவும், ஆனால் துரதிஷ்டவசமாக அது குறித்து கோத்தபாய ராஜபக்ஷ அப்போது கவலைப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பணிகள் தொடர்பில் எவ்வித இணக்கப்பாடும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



