புனர்வாழ்வு மையத்தில் இருந்து தப்பிய நான்கு கைதிகள் கைது
#Arrest
#Prison
#prisoner
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
Prathees
2 years ago

தல்தென புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற மேலும் நான்கு கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் கூட்டு நடவடிக்கையின் போதே நேற்று பிற்பகல் இது இடம்பெற்றுள்ளது.
தப்பியோடிய ஏனைய மூன்று கைதிகளை கைது செய்வதற்கான மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தல்தென புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 09 கைதிகள் நேற்று காலை தப்பிச் சென்றுள்ளனர்.
ரமழானில் நோன்பு இருந்த ஒன்பது முஸ்லிம்கள் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.
அவர்களில் இருவர் நேற்று காலை மீண்டும் கைது செய்யப்பட்டனர்.



