கொத்மலை ஓயாவில் உயிரிழக்கும் மீன்கள்: சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள கோரிக்கை

#NuwaraEliya #Fish #Death #SriLanka #Sri Lankan Army #sri lanka tamil news
Prathees
2 years ago
கொத்மலை ஓயாவில் உயிரிழக்கும் மீன்கள்: சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள கோரிக்கை

கடந்த 16ஆம் திகதி முதல் உயிரிழந்த மீன்களை உண்ணவேண்டாம் என நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆற்றின் இரு கரைகளிலும் வசிப்பவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அம்பேவெல முதல் மெரயா, அல்ஜின் அகரகந்த வரை சுமார் 12 கிலோமீற்றர் தூரம் வரையில் கேஜில் வாழும் மீன்கள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதுடன், இறந்த மீன்களை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் ஆற்றின் இரு கரைகளிலும் வசிக்கும் பிரதேசவாசிகள் எடுத்துச் சென்றுள்ளனர். உணவுக்காக இந்த வழியை பயன்படுத்தக் கூடாது என நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நிஷங்க விஜேவர்தன மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொத்மலை ஓயாவில் மீன்கள் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஓயாவின் நீர் மாதிரிகள் மற்றும் பல இறந்த மீன்கள் பேராதனை கன்னோருவையில் உள்ள பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை கால்நடை வைத்தியர் திரு.சுரேஷ் குமார் தெரிவித்தார்.

அம்பேவெல தொடக்கம் தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கம் வரை சுமார் 40 கிலோமீற்றர் வரை நீர் பாய்வதோடு, கொத்மலை ஓயாவில் நீர் கறுப்பு நிறமாகப் பாய்வதால் மேல் கொத்மலை நீர்த்தேக்கம் வரை மீன்கள் இறக்கும் சாத்தியம் காணப்படுகின்றது. ஓயாவில் அவதானமாக இருக்குமாறும், தற்போதைய சூழ்நிலை காரணமாக கொத்மலா ஓயாவின் நீர் பயன்படுத்தப்படாது எனவும் நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!