ஐக்கிய இராச்சிய – இலங்கை மூலோபாய உரையாடலில் பங்கேற்கவுள்ள வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன

#Britain #SriLanka #sri lanka tamil news #Meeting #Lanka4
Kanimoli
2 years ago
ஐக்கிய இராச்சிய – இலங்கை மூலோபாய உரையாடலில் பங்கேற்கவுள்ள வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன

லண்டனில் உள்ள வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தில் வெளிவிவகார செயலாளர் மட்டத்தில் நாளை ஆரம்பமாகவுள்ள ஐக்கிய இராச்சிய – இலங்கை மூலோபாய உரையாடலில் வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன பங்கேற்கவுள்ளார்.

வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் ஐக்கிய இராச்சிய வெளியுறவு அமைச்சர் அன்னே மேரி ட்ரெவெல்யன் அவர்களால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கவுள்ள இந்த உரையாடல், வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் நிரந்தர துணைச் செயலாளர் சேர் பிலிப் பார்டன் அவர்களின் பங்கேற்புடன் நடாத்தப்படும்.

இந்த ஆண்டு இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75வது ஆண்டு நிறைவை எய்தியுள்ளதொரு முக்கிய தருணத்தில், வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் அழைப்பின் பேரில் ஆரம்ப மூலோபாய உரையாடல் கூட்டப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக உறவுகள் குறித்து கலந்துரையாடுவதற்கானதொரு மன்றத்தை மூலோபாய உரையாடல் இரு தரப்புக்கும் வழங்கும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!