ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி மக்கள் சுவர்

#Easter Sunday Attack #Negombo #Colombo #Malcolm Ranjit Andagai #SriLanka #Lanka4 #sri lanka tamil news
Prathees
2 years ago
ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி மக்கள் சுவர்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் உண்மை மற்றும் நீதியைக் கோரி எதிர்வரும் 21 ஆம் திகதி மக்கள் சுவரைக் கட்டுவதற்கு அனைத்துப் பிரஜைகளும் ஒன்றிணையுமாறு கேட்டுக் கொள்வதாக பேராயர் மல்கம் ரஞ்சித் கர்தினால் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பேராயர் மாளிகையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நீர்கொழும்பு கொழும்பு பிரதான வீதியின் இருபுறமும் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திலிருந்து கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம் வரை மக்கள் சுவர் வரிசையாக அமைக்கப்படவுள்ளதாகவும் கர்தினால் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!