மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் காத்மாண்டு முதலிடம்

#Breakingnews #ImportantNews #world_news #Tamilnews #pollution
Mani
2 years ago
மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் காத்மாண்டு முதலிடம்

நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டு, உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. காற்றின் தரம் 190ஐ தாண்டியதால், உள்ளூர் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்த வார தொடக்கத்தில், நேபாள அரசாங்கம் காத்மாண்டு மற்றும் நாட்டின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் அதிகரித்து வரும் மாசுபாட்டிற்கு, காட்டுத் தீ மற்றும் விவசாய கழிவுகளை எரிப்பதாக குற்றம் சாட்டியது.

கட்டுமானப் பணிகளின் தூசி, பழைய, மோசமாகப் பராமரிக்கப்படும் வாகனங்களிலிருந்து வரும் புகை, நிலக்கரி, செங்கல் சூளைகளில் இருந்து வரும் புகை ஆகியவை காத்மாண்டு நகரைச் சூழ்ந்துள்ளன. இது புற்றுநோய், பக்கவாதம், ஆஸ்துமா மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றின் அபாயத்தை அதிகரித்துள்ளது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!