நீண்ட காலமாக கொக்குவில் பகுதியில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட நபர் கைது
#Police
#Arrest
#Jaffna
#drugs
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
Kanimoli
2 years ago

நீண்ட காலமாக காங்கேசன்துறை வீதி கொக்குவில் பகுதியில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தநபர் ஒருவர் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 35 வயதுடைய கொக்குவில் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் நீண்ட காலமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இன்றைய தினம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து ஒரு தொகுதி கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



