உணவு உட்கொண்ட பின் எள்ளுருண்டையை இனிப்பு பண்டமாக எடுத்துக்கொண்டு வருவதால் உடலுக்கேற்படும் பயன்கள்.

#ஆரோக்கியம் #உணவு #அன்டனி #தேவராஜ் #அன்டனி தேவராஜ் #Health #Food #Antoni #Theva #Antoni Thevaraj
உணவு உட்கொண்ட பின் எள்ளுருண்டையை இனிப்பு பண்டமாக எடுத்துக்கொண்டு வருவதால் உடலுக்கேற்படும் பயன்கள்.

நாம் எல்லோருமே தினசரி உணவு உட்கொண்ட பின் டிசேட் வகையான இனிப்பு பண்டங்களை சாப்பிடுவது வழக்கம். அந்த வகையில் எள்ளுருண்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் உடலுக்கு என்னவென்பதை இன்று பார்க்கலாம்.

எலும்பு வளர்ச்சிக்கு:

இப்போது உள்ள உணவு பழக்கவழக்கம் மற்றும் பண்பாடு காரணமாக மக்கள் அனைவருக்கும் விரைவில் எலும்பு தேய்மானம் அடைந்து விடுகிறது.
எலும்பு வளர்ச்சி மற்றும் தேய்மானம் குறைவதற்கு தினமும் எள் உருண்டை சாப்பிடுவது நல்லது.

முடி வளர்ச்சிக்கு:

ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவருக்கும் உள்ள பெரிய கவலை முடி உதிர்வு தான். தலை முடி வளர்ச்சிக்கும் அவை மேலும் உதிராதிருப்பதற்கும் எள்ளுருண்டை முக்கிய பங்கு வகிக்கிறது.

மூச்சு திணறல் குணமாக:

சுற்றுச்சூழல் மாசு மற்றும் தொற்று காரணமாக இப்பொழுது உள்ள பெரும்பாலான மக்களுக்கு ஆஸ்துமா உள்ளது.

மூச்சு திணறலை சரி செய்வதற்கு எள்ளு உருண்டை உதவுகிறது. மேலும் இதில் இருக்கும் புரத சத்து உடலுக்கு தேவையான சக்தியை கொடுக்கிறது.

புண்கள் குணமாக:

எள்ளில் அதிக அளவு இயற்கை சார்ந்த சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள் உடலில் இருக்கும் புண், காயம் போன்றவற்றை சரி செய்வதற்கு உதவியாக இருக்கிறது. மேலும் இது பாதத்தில் ஏற்படும் பித்த வெடிப்புகளை சரி செய்கிறது.

மாதவிடாய் சீராக வருவதற்கு:

ஒரு சில பெண்களுக்கு மாதவிடாய் சற்று தாமதமாக வரும் அப்படிபட்டவர்கள் மாதவிடாய் சீக்கிரம் வருவதற்கும் மற்றும் சீராக வருவதற்கும் பெண்கள் எள் உருண்டை சாப்பிடுவது நல்லது.

எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதனால் தான் நமக்கு விரைவில் தொற்று ஏற்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கு சத்துள்ள உணவுகளை எடுத்து கொள்வது மிகவும் முக்கியம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கு அடிக்கடி எள் உருண்டை சாப்பிடுவது நல்லது.

இரத்த உற்பத்திக்கு:

எள்ளில் இரும்பு சத்து மற்றும் துத்தநாக சத்து அதிக அளவு உள்ளது. அதனால் உடலில் இரத்த உற்பத்தியை அதிகரிப்பதற்கு எள்ளு உருண்டை உதவியாக இருக்கும்.

இந்த எள் உருண்டயை வயது வேறுபாடுன்றி அனைவரும் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருப்பதற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

எள் உருண்டை தினமும் சாப்பிட்டு வந்தால் தோல் சம்மந்தமான பிரச்சனைகள் விரைவில் குணமாகும். மேலும் மனதில் ஏற்படும் பதட்டம் குணமாகவும் உதவும்.