யாழ்ப்பாணத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனாத் தொற்று!

#SriLanka #Jaffna #Corona Virus #Covid 19 #Covid Vaccine #Hospital
Mayoorikka
2 years ago
யாழ்ப்பாணத்தில் மீண்டும் அதிகரிக்கும்  கொரோனாத் தொற்று!

யாழ்ப்பாணத்தில் மீண்டும் கொரோனாப் பரவல் ஏற்பட்டுள்ளதாக யாழ் போதனாவைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில்  வைத்தியசாலையில் மீளவும் கொவிட் 19 தனிமைப்படுத்தல் விடுதி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை பெண் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

அவர்  வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மேலும் 3 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் மீளவும் போதனா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!