இலங்கைக்கு வழங்கிய 200 மில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்த பங்களாதேஷ் கால அவகாசம்!
#SriLanka
#Sri Lanka President
#Bangladesh
#money
Mayoorikka
2 years ago
பங்களாதேஷ் – இலங்கைக்கு வழங்கிய 200 மில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடித்துள்ளது.
முன்னதாக, இலங்கை மத்திய வங்கி இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 200 மில்லியன் டொலர் கடனின் முதல் தவணையை வழங்க பங்களாதேஷிடம் கால அவகாசம் கோரியிருந்தது.
அதற்குள் தனது கடனை மறுசீரமைக்க முடியும் என்று நம்பிக்கையை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
மேலும், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் அதன் முதல் தவணையையும் செப்டெம்பர் மாதத்திற்குள் மற்றொரு தவணையையும் வழங்குவதாகக் கூறியதாக பங்களாதேஷ் வங்கியின் ஆளுநர் அப்துர் ரூஃப் தாலுக்டர் தெரிவித்துள்ளார்.