பாகிஸ்தானில் நடந்த கார் விபத்தில் அமைச்சர் அப்துல் ஷகூர் உயிரிழந்தார்.

#world_news #Pakistan #Minister #Accident
Mani
2 years ago
பாகிஸ்தானில் நடந்த கார் விபத்தில் அமைச்சர் அப்துல் ஷகூர் உயிரிழந்தார்.

நேற்று, பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான அமைச்சரவையில் மத விவகார அமைச்சராக முப்தி அப்துல் ஷகூர் இருந்தார். இவர் இஸ்லாமாபாத்தில் உள்ள மரியத் என்ற இடத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த போது கார் விபத்தில் சிக்கினார். காரை அவரே ஓட்டினார்.

அமைச்சர் முப்தி கார் மோதியதில் சிக்கினார். பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனிடையே அமைச்சரின் கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்த 5 பேரை போலீசார் கைது செய்து, சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த அமைச்சர் முக்தியின் குடும்பத்தினருக்கு பிரதமர் ஷபாஸ் ஷெரீப், அவரது அமைச்சர்கள் மற்றும் பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!