போதகரின் பேச்சை கேட்டு உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட நால்வர் மரணம்

#Kenya #fasting #Death #Hospital #Arrest #world_news #Tamilnews #Lanka4
Prasu
2 years ago
போதகரின் பேச்சை கேட்டு உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட நால்வர் மரணம்

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் ஷகா ஹோலா கிராமத்தில் உள்ளூர் போதகர் ஒருவர் தண்ணீர், உணவு இன்றி விரதம் இருந்ததால் ஏசு நாதரை சந்திக்கலாம் என்று கூறினார். 

குட் நியூஸ் இன்டர்நேஷனல் சர்ச் என்ற அமைப்பை நடத்தி வரும் அந்த போதகரின் பேச்சை கேட்டு பலர் அங்குள்ள காட்டுக்குள் முகாமிட்டு உண்ணாவிரதம் இருக்க தொடங்கினர். 

அவர்கள் பல நாட்கள் உணவு, தண்ணீர் என எதுவும் சாப்பிடாமல் இருந்து வந்துள்ளனர். இதனால் உடல் பலவீனமடைந்து மயங்கினர். 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் காட்டு பகுதிக்குள் சென்றனர். அப்போது அங்கு 15 பேர் உண்ணாவிரதத்தை கடைபிடித்து வந்தது தெரிந்தது. 

இதில் 4 பேர் உயிரிழந்து பிணமாக கிடந்தனர். 11 பேரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது தொடர்பாக போலீசார் கூறும்போது, போதகர் பால் மக்கென்சி, இங்குள்ள மக்களிடம் சாபத்தை போக்க உண்ணாவிரதம் இருக்க சொல்லி இருக்கிறார். 

ஏசுநாதரை சந்திக்க பட்டினி கிடக்கும்படி தன்னை பின்பற்றுபவர்களை அறிவுறுத்தியுள்ளார். காட்டில் மேலும் பலரின் உடல்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம் என்றனர். 

தலைமறைவான போதகரை போலீசார் தேடி வருகிறார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!