IPL Match23 - குஜராத் அணியை வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

#India #IPL #T20 #Gujarat #Rajasthan #win #Tamilnews #Sports News #Lanka4
Prasu
2 years ago
IPL Match23 - குஜராத் அணியை வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

ஐபிஎல் தொடரில் அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற 2-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. 

அதன்படி, குஜராத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் விரித்திமான் சஹா 4 ரன்னில் வெளியேறினார். சாய் சுதர்சன் 20 ரன்னிலும், ஹர்திக் பாண்ட்யா 28 ரன்னிலும் அவுட்டாகினர். 

பொறுப்புடன் ஆடிய ஷுப்மன் கில் 45 ரன்னில் ஆட்டமிழந்தார். அபினவ் மனோஹர் அதிரடியாக ஆடி 13 பந்தில் 3 சிக்சர் உள்பட 27 ரன்னில் அவுட்டானார். 

கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய டேவிட் மில்லர் 30 பந்தில் 46 ரன்னில் அவுட்டானார். இறுதியில், குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை சேர்த்தது. 

ராஜஸ்தான் சார்பில் சந்தீப் ஷர்மா 2 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, 178 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. 

இந்த ஆட்டத்தின் இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 19.2 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!